இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் அடுத்த சுற்று கலந்துரையாடலுக்கு தயார்!
2022-05-08 18:34:32

சர்வதேச நாணய நிதியம் மே 9 முதல் மே 23 வரை இலங்கையுடன் அடுத்த சுற்று தொழில்நுட்ப கலந்துரையாடல்களை தொடங்கும்  என்று சர்வதேச நாணய நிதியத்தின்  இலங்கைக்கான தூதுக்குழு தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இரு தரப்பினரும் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு பிரச்சினைகளை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவி பெற இலங்கை விரும்புகின்றது.