இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம் !
2022-05-08 18:33:42

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், இலங்கை அரசுத்தலைவர் கோத்தபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை இரவு அவசரகால நிலையை அறிவித்தார்.

அரசுத்தலைவர் மாளிகை வெளியிட்ட அரசாங்க அறிக்கையில், நாட்டின் பொது பாதுகாப்பையும், பொது ஒழுங்கையும் பாதுகாக்கவும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகங்களையும் சேவைகளையும் உத்தரவாதம் செய்யவும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.