ஈரானில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரின் பயணம்
2022-05-08 16:32:23

ஈரானின் செய்தி ஊடகங்கள் 7ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரும், வெளிவிவகார நடவடிக்கை பணியகத்தின் துணைத் செயலாளருமான மோரா 10ஆம் நாள் ஈரானில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அண்மையில், ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கையுடன் தொடர்புடைய தரப்புகளுடன் ஈரான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. ஈரானும் அமெரிக்காவும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் துறையில் ஐரோப்பிய ஒன்றியம் ஆற்றியுள்ள முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, மோராவின் இப்பயணம், பேச்சுவார்த்தையில் எஞ்சியிருக்கும் சில முக்கியமான பிரச்சனைகள் குறித்த ஆக்கபூர்வமான ஆலோசனையின் ஒரு புதிய கட்டமாகக் காணப்படுகின்றது என்று தெரிய வருகின்றது.