பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள பிரிட்டனின் பொருளாதாரம்
2022-05-08 19:11:33

வடக்கு அயர்லாந்து பிரச்சினையானது, பிரிட்டனின் காலனித்துவக் கொள்கையிலிருந்து விட்டுச்சென்ற சிக்கலான வரலாற்றுப் பிரச்சினையாகும். 2022ஆம் ஆண்டின் ஜனவரி திங்களில், வடக்கு அயர்லாந்து உடன்படிக்கையின் முதற்குறிப்பு குறித்து பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

இதைத் தவிர, புதிய ரக கரோனா வைரஸ், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விடுபடுவதால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி மற்றும் தொழிலாளர் பிரச்சனைகள், எரிசக்தி விலை உயர்வு ஆகியவற்றின் காராணமாக, பிரிட்டனின் பொருளாதாரம் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளது. பிரிட்டனின் பண வீக்க விகிதம், இவ்வாண்டு 10 விழுக்காட்டுக்கும் தாண்டி, கடந்த 40ஆண்டுகளில் புதிய பதிவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகாலமாக, பிரிட்டனின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விடுபட்டதால் ஏற்பட்ட தாக்கம், தொற்றுநோயின் தாக்கத்தை விட மிகவும் கடுமையாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது.