சந்தை மீட்சிக்கு ஆதரவளிக்கும் டிஜிட்டல் நுகர்வு பத்திரங்கள்
2022-05-09 14:26:56

இவ்வாண்டின் மே தின விடுமுறையில், பெய்ஜிங் நகரவாசி வாங் ஜிங்யூ குளிர்சாதனப் பெட்டி ஒன்றை வாங்கினார். பசுமை எரியாற்றல் நுகர்வு பத்திரம் மற்றும் தள்ளுபடி காரணமாக அவரது செலவில் 2200 யுவான் குறைந்தது. ஏப்ரல் 12ஆம் நாள் வரை, பெய்ஜிங்கில் சாதாரண நுகர்வோருக்கு 30 கோடி யுவான் மதிப்புள்ள பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பெய்ஜிங்கைத் தவிர, ஹுநான் மாநிலத்தின் தலைநகர் சாங்ஷாவிலும் நகரவாசிகளுக்கு 3 கோடி யுவான் நுகர்வு பத்திரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற மாநிலமான யுன்னானில் இவ்வாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மொத்தம் 30 கோடி யுவான் மதிப்புள்ள பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

2021ஆம் ஆண்டில் சீனாவின் 220க்கும் மேற்பட்ட நகரங்களில் நுகர்வுக்கான இத்தகைய டிஜிட்டல் பத்திரங்கள் வழங்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு 1900 கோடி யுவானாகும். அப்போது, 1 யுவான் பத்திரத்தின் மூலம் 8 யுவான் நுகர்வு பெறப்பட்டது. அத்துடன், 1 யுவான் பத்திரத்தில் 0.87 யுவான் சிறு மற்றும் நுண்ணிய நிறுவனங்களுக்குக் கிடைத்தது.

இத்தகைய நுகர்வுப் பத்திரங்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, நோய் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்கள் மற்றும் வணிகர்கள் இன்னல்களைச் சமாளிப்பதக்குத் துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.