அமெரிக்கத் தேசிய ஜனநாயக அறக்கட்டளை உண்மை நோக்கம் என்ன
2022-05-09 20:43:39

அமெரிக்காவின் தேசிய ஜனநாயக அறக்கட்டளை 1983ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக, வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதி ஆதரவுடன், அது, நிதியுதவி வழங்கிய முறையில், குறிப்பிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், அமெரிக்க கருத்துகளைப் பரப்பி, பிரிவினைவாதம் மற்றும் பகைமையைத் தூண்டிவிட, பல அரசு சாரா நிறுவனங்களைக் கையாண்டு வருகிறது.

இவ்வாண்டு மார்ச் திங்கள் இவ்வமைப்பின் தலைவர் டேமன் வில்சன் தலைமையிலான குழுவினர்கள், சீனாவின் தைவானில் பயணம் மேற்கொண்டு, வரும் அக்டோபர் திங்கள் தை பெய் நகரில் உலக ஜனநாயக இயக்கம் என்ற மாநாட்டை நடத்துவதாக அறிவித்தார். இச்செயல், ஜனநாயகம் என்ற சாக்குபோக்கில் தைவானின் சுதந்திர சக்திகளுக்கு ஆதரவு அளித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில், 2ஆவது மத்திய உளவு நிறுவனம் என அழைக்கப்பட்ட இவ்வமைப்பு, உலகளவில் வண்ணப் புரட்சியை ஏற்படுத்துவது, மற்ற நாடுகளின் ஆட்சியைக் கவிழ்ப்பது, பிரிவினை சக்திகளுக்கு ஆதரவு அளிப்பது, பொய்யான தகவல்களைப் பரப்புவது முதலியவற்றில் ஈடுபட்டு வருகிறது. இதன் செயல்களுக்கு சர்வதேசச் சமூகம் கடும் மனநிறைவின்மை தெரிவித்துள்ளது.