கியூபாவில் விடுதியில் வெடிப்பு விபத்து:31 பேர் சாவு
2022-05-09 09:59:30

கியூபா பொது சுகாதார அமைச்சகம் மே 8ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, தலைநகர் ஹவானாவிலுள்ள சரடோகா என்ற விடுதியில் 6ஆம் நாள் நிகழ்ந்த வெடிப்பு விபத்தில் 8ஆம் நாள் பிற்பகல் 6:30 மணி வரை 31 பேர் உயிரிழந்தனர். 85 பேர் காயமுற்றனர். மீட்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் இயற்கை எரிவாயு கசிவின் காரணமாக இவ்விபத்து நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.