2022 பிரிக்ஸ் சிந்தனை கிடங்கின் சர்வதேசக் கருத்தரங்கு சீனாவில் துவக்கம்
2022-05-09 14:18:19

2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் சிந்தனை கிடங்கின் 2ஆவது சர்வதேசக் கருத்தரங்கு அண்மையில் சீனாவின் ஜூங்ஜிங் மாநகரில் நேரிலும் இணையம் வழியிலும் நடைபெற்றது. பிரிக்ஸ் ஒத்துழைப்பு மற்றும் உலகின் வளர்ச்சி: புதிய காலம், புதிய கடமை, புதிய திட்டம் என்ற தலைப்பில் 5 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் அறிஞர்களும் விவாதம் நடத்தினர். இவ்வாண்டு, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர் பதவி வகிக்கும் நாடு சீனா ஆகும். உயர்தரமான கூட்டுறவை வளர்த்து உலகின் புதிய காலத்தைக் கூட்டாக உருவாக்குவது இவ்வாண்டு பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புத் தலைப்பு என்று சீனா அறிவித்துள்ளது. வலிமை, பசுமை மற்றும் ஆரோக்கியம் படைத்த உலகின் வளர்ச்சியை பிரிகஸ் நாடுகளுடன் இணைந்து கூட்டாக நனவாக்க சீனா விரும்புகிறது என்று பிரிக்ஸ் சிந்தனை கிடங்கின் சீனச் செயற்குழு தலைமை செயலாளர் ஜின்சின் தெரிவித்தார். மேலும், திறந்த மனப்பான்மையுடன் பரிமாற்றம் நடத்திக் கூட்டாக ஒத்துழைக்க வேண்டும் என பிரேசில், ரஷியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.