உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை இலங்கை நிறுத்தியுள்ளது!
2022-05-09 16:38:39

இலங்கையின் முன்னணி எரிவாயு விநியோக நிறுவனமான லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட், புதிய எரிவாயு இருப்புகள் வரும் வரை உள்நாட்டு நுகர்வோருக்கு எரிவாயுவை வழங்க இயலாது என்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் கூறுகையில், தற்போது தொழில் சார்ந்த எரிவாயு இருப்புகள் மட்டுமே உள்ளன என்றும், மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திரவ பெட்ரோலிய வாயுவை இறக்குமதி செய்வதற்கு திங்கட்கிழமை 70 இலட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்தவிருக்கின்றோம் என்று ஹேரத் கூறினார்.

இலங்கை மக்கள் பல மாதங்களாக கடுமையான எரிவாயு பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் மக்கள் எரிவாயுவை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.