உலக நிர்வாகத்துக்கு ஆசியாவின் பங்கு
2022-05-09 10:08:16

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, கம்போடிய துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான பிரக் சோக்ஹோனுடன் 8ஆம் நாள் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாங் யீ கூறுகையில், தற்போதைய உலகில் அமைதி சீர்குலைந்துள்ளது. வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் சிக்கியுள்ளது. அடுத்த திங்கள் முதல், சீனா, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லந்து ஆகிய நாடுகளில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு, கிழக்காசிய ஒத்துழைப்புத் தலைவர்கள் கூட்டம், ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் ஆகியவை நடைபெறவுள்ளன. உலக நிர்வாகம் ஆசிய நேரத்தில் நுழைந்துள்ளது. உலகின் வளர்ச்சிக்கு ஆசியா ஆற்றிடும் பங்கை உலகமே எதிர்பார்த்துள்ளது என்றார்.