ஆப்கானிஸ்தானுக்கு சீனா மனித நேய உதவிப் பொருட்கள்
2022-05-10 15:53:41

சீன தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு நிதியம், ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்துடன் ஒத்துழைத்து, ஆப்கானிஸ்தானுக்கு அளித்த மனித நேய உதவிப் பொருட்கள் மே 9ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரான காபூலில் ஒப்படைக்கப்ப்பட்டது.

சீன தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு நிதியம் உதவியாக வழங்கிய 1800 பள்ளி பைகள் ஆப்கான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சீன தரப்பின் இந்த உதவி, மாணவர்கள் கல்வி பயிலும் வசதிகளை மேம்படுத்தும் என்று காபூல் கல்வித் துறை பொறுப்பாளர் காரி தெரிவித்தார்.

அண்மையில் வெள்ளத்தின் பாதிப்புக்குள்ளான ஆப்கானிஸ்தான் குடும்பங்களுக்கு சீன தூதரக அதிகாரி ஹு கோஅய் ஆறுதல் தெரிவித்தார். மேலும், சீனா ஆப்கான் மக்களின் வாழ்க்கை நிலையில் கவனம் செலுத்துவதோடு, உணவு, ஆடை, தடுப்பூசி, மருந்து உள்ளிட்ட மனிதநேய உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதாகவும் அவர் கூறினார்.