இலங்கை பிரதமரின் ராஜினாமாவை அரசுத் தலைவர் உறுதி செய்தார்!
2022-05-10 19:00:27

இலங்கை அரசுத் தலைவர் கோட்டாபய ராஜபசவின் உத்தரவின் பேரில் திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில், தலைமை அமைச்சர் மஹிந்த ராஜபச திங்கட்கிழமை அன்று பதவி விலகியுள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், திங்கட்கிழமை இலங்கையில் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் புதன்கிழமை காலை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அலரிமாளிகைக்கு எதிரே அரசுக்கு ஆதரவான மக்கள், மஹிந்த ராஜபசவை இராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தி திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மஹிந்த ராஜபசவுடன் அவர்கள் சந்திப்பு நடத்திய பிறகு, அவர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அலரிமாளிகைக்கு அருகில் மோதலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.