சீன-பிரான்ஸ் அரசுத் தலைவர்கள் தொடர்பு
2022-05-10 21:10:52

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரானுடன் 10ஆம் நாள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் தற்சார்ப்பு நாடுகளான சீனாவும் பிரான்ஸும், நிரந்தர நெருங்கிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை நிலைநிறுத்தி, இரு தரப்பு, சீன-ஐரோப்பிய உறவு மற்றும் உலகம் சார்ந்த துறைகளில் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மாக்ரான் கூறுகையில், இரு நாடுகள் பல்வேறு துறைகளில் பயனுள்ள சாதனைகளைப் பெற்றுள்ளன. எதிர்காலத்தில், வேளாண்மை, விண்வெளி ஆய்வு உள்ளிட்ட துறைகளில் சீனாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க பிரான்ஸ் விரும்புவதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் உக்ரைன் நிலைமை குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பேச்சுவார்த்தை மூலம் ரஷிய-உக்ரைன் அமைதியை மீட்டெடுப்பதற்குத் தொடர்புடைய தரப்புகள் ஆதரவளிக்க வேண்டும் என்று இருவரும் சம்மதித்துள்ளனர்.