இந்தியாவில் சியாவுமி ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது!
2022-05-10 19:14:08

பிரீமியர் ஆராய்ச்சி நிறுவனமான இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் திங்களன்று வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தி கடந்த ஆண்டை விட தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக 5 விழுக்காடு குறைந்துள்ளதாகவும், விற்பனையாளர்கள் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3 கோடியே 70 இலட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சீன நிறுவனமான சியாவுமி தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. ஆனாலும், அதன் விற்பனை கடந்த ஆண்டை விட 18 விழுக்காடு குறைந்துள்ளது. இணைய விற்பனையில் சியாவுமி நிறுவனம், அதன் துணை வணிகப் பொருளான POCO உடன் சேர்ந்து 32 சதவீத பங்குகளுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சியாவுமி 11i மற்றும் ரெட்மி நோட் 11T ஆகியவை அதிக விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் ஆகும் என்று இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தை சாம்சங் நிறுவனமும், மூன்றாவது இடத்தை ரியல்மி நிறுவனமும், நான்காவது இடத்தை விவோ நிறுவனமும் மற்றும் ஐந்தாவது இடத்தை ஒப்போ நிறுவனம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.