ஹாங்காங் தேர்தல் பற்றிய மேலை நாடுகளின் அறிக்கை அபத்தமானது!
2022-05-10 11:10:48

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது நிர்வாக அதிகாரி தேர்தல் மே 8ஆம் நாள் வெற்றிகரமாக நடைபெற்றது. ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதிகள் வெளியிட்ட அறிக்கையில் இத்தேர்தல் குறித்து விமர்சிக்கப்பட்டது. இத்தேர்தலின் போக்கைப் பார்த்தால், இவ்வறிக்கை போலித்தனம் மற்றும் அபத்தமானதாக இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

புதிய தேர்தல் அமைப்புமுறை நடைமுறைக்கு வந்த பிறகு ஹாங்காங்கில் நடைபெற்ற முதலாவது நிர்வாக அதிகாரி தேர்தல் என்ற முறையில், சட்டப்படி நடைபெற்ற 6ஆவது நிர்வாக அதிகாரி தேர்தல், சமம், நேர்மை, பாதுகாப்பு, தூய்மை ஆகியவற்றைக் கடைப்பிடித்தது. இத்தேர்தலில் 97.74 விழுக்காடு வாக்குகள் பதிவாகியதும், தாய்நாட்டுக்குத் திரும்பிய பிறகு வாக்காளர்கள் மிக அதிகமாக வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடைபெற்ற தேர்தல் ஆணையத்துக்கான தேர்தல், சட்டசபை தேர்தல் ஆகியவற்றைச் சேர்த்து, இம்மூன்று தேர்தல்கள், ஹாங்காங்கின் நீண்டகால செழுமை மற்றம் அமைதிக்கு உறுதியான அடிப்படையை உருவாக்கியுள்ளன. புதிய தேர்தல் அமைப்புமுறையானது, ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கோட்பாட்டுக்கும், ஹாங்காங்கின் நடைமுறைக்கும் பொருத்தமாக இருப்பதும், பரந்தளவில் உண்மையான பயனுள்ள ஜனநாகமாக இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இத்தேர்தல் மீது அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் பழிதூற்றும் செயல், சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவுகளின் விதிமுறையையும் மிதித்து, சீனாவின் வெற்றிகரமான நடைமுறையை வேண்டுமென்றே திரித்துப்புரட்டுவதாகும். இது, ஹாங்காங்கின் ஜனநாயக வளர்ச்சியில் வன்முறையாக தலையீடு செய்து கடும் பாதிப்பை ஏற்படுத்துவதற்குச் சமம். இருப்பினும், புதிய துவக்கப் புள்ளியில் நிற்கும் ஹாங்காங்கின் வளர்ச்சியை இத்தகைய அவதூறுகளால் தடுக்க முடியாது.