ஜொல்மோ லுங்மா சிகரத்தின் பனி மாதிரித் திரட்டுதல் பணி முடிவு
2022-05-10 09:47:01

ஜொல்மோ லுங்மா சிகரத்துக்கான சீனாவின் புதிய அறிவியல் ஆய்வு நடவடிக்கைக்கான தலைமையகம் வெளியிட்ட தகவலின்படி, மே 8ஆம் நாள் இரவு 8:30 மணி அளவில், ஜொல்மோ லுங்மா சிகரத்திலிருந்து திரட்டப்பட்ட பனி மாதிரிகள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 7028 மீட்டர் உயரமான இடத்தில் திரட்டப்பட்ட பனி மாதிரிகள் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகருக்கு அனுப்பப்பட்டன. ஜொல்மோ லுங்மா சிகரத்தின் பனி மாதிரி திரட்டும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அதன் மீதான ஆய்வுப் பணி விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.