உலக வளர்ச்சி முன்மொழிவு பற்றிய கூட்டத்தில் வாங் யீ உரை
2022-05-10 14:06:37

சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மே 9ஆம் நாள் பெய்ஜிங்கில் இருந்தவாறு, உலக வளர்ச்சி முன்மொழிவுக்கான நண்பர்கள் குழுவின் உயர் நிலைக் காணொளிக் கூட்டத்தின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.

கடந்த செப்டம்பர் திங்களில், ஐ.நா. பொது பேரவை கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், உலக வளர்ச்சி முன்மொழிவை முன்வைத்தார். வளர்ச்சி பிரச்சினை குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது, உலக வளர்ச்சி கூட்டாளியுறவை வலுப்படுத்துவது, சர்வதேச வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை முன்னேற்றுவது, தொடரவல்ல வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலின் இலக்கை நனவாக்குவதற்கு புதிய ஆற்றலை ஊட்டுவது ஆகியவை, இம்முன்மொழிவின் நோக்கமாகும் என்று வாங் யீ கூறினார்.

100-க்கும் மேலான நாடுகள் இம்முன்மொழிவுக்கு ஆதரவு அளித்துள்ளன. 53 நாடுகள் இம்முன்மொழிவுக்கான நண்பர்கள் குழுவில் சேர்ந்துள்ளன என்று வாங் யீ தெரிவித்தார்.