கம்யூனிஸ்ட் இளைஞர் லீக்கின் ஆரம்ப குறிக்கோள் மற்றும் கடமை
2022-05-10 11:35:51

 

சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவின் கொண்டாட்ட மாநாடு மே 10ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் இம்மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து, கட்சி மற்றும் பொது மக்களுக்காகப் போராட்டுவது, கம்யூனிஸ்ட் இளைஞர் லீக்கின் ஆரம்ப குறிக்கோள் மற்றும் கடமையாகும். கடந்த 100 ஆண்டுகளாக, கட்சியின் உறுதியான தலைமையில், தேசத்தின் சுதந்திரம் மற்றும் மக்களின் விடுதலையைப் பெறவும், நாட்டின் செழுமை மற்றும் வலிமையையும் மக்களின் இன்பமான வாழ்க்கையையும் நனவாக்கவும் இளைஞர் லீக் பாடுபட்டு, சீனத் தேசத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு உற்சாகமான மற்றும் இளமையான சாசனத்தைப் படைத்துள்ளது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.