நாணயக் கொள்ளையை மாற்றி உலகிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது அமெரிக்கா
2022-05-11 10:54:13

அமெரிக்க பெட்ரால் ரிசர்வ் வங்கி வட்டி விகித அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கம் இலங்கையிலுள்ள வணிகர்கள், மொசாம்பிக்கிலுள்ள விவசாயிகள் மற்றும் ஏழை நாடுகளிலுள்ள குடும்பங்கள் அனைத்திலும் பிரதிபலிக்கிறது என்று அமெரிக்காவின் செய்தியாளர் ஒருவர் தனது கட்டுரையில் எழுதினார். உலகப் பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தை இதனால் பாதிப்படையும் என்று பன்னாட்டுச் சமூகம் கவலைப்படுகிறது.

முந்தைய பூஜியம் வட்டி மற்றும் அளவிலான தளர்வு கொள்கையும் சரி, தற்போதைய நாணயக் கொள்கை மாற்றமும் சரி, அமெரிக்கா தனது நாணயத்தின் மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி உலகிற்கு தனது நெருக்கடியை மாற்றிக் கொடுக்கிறது. இது, மீட்சிக்காக முனைப்புடன் செயல்படும் பொருளாதார சமூகங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு புறம், அமெரிக்க பெட்ரால் ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலரின் ஈர்ப்பாற்றலை அதிகரிக்க வட்டி விகிதத்தை உயர்த்தும் செயல், புதிய வளர்ச்சி வாய்ப்பு கண்ட சந்தைகளிலிருந்து மூலதன வெளியேற்றம், நாணய மதிப்பு குறைப்பு ஆகிய இடர்பாடுகளை தீவிரமாக்கியுள்ளது. பல நாடுகளின் கடன் இடர்பாடும் இதனால் தீவிரமாக அதிகரித்துள்ளது. மறு புறம், அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றத்துடன் மற்ற நாடுகளின் நாணய மதிப்பு குறைந்து வருவது காரணமாக, அந்நாடுகளிலுள்ள பொது மக்களின் கொள்வனவுத் திறன் குறைக்கப்படும். வளரும் பொருளாதாரச் சமூகங்களின் கடினமான மீட்சிப் போக்கு மேலும் பாதிக்கப்படும்.