புறவெளி பாதுகாப்பு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2022-05-11 11:05:21

புறவெளியில் பொறுப்பான நடத்தை விதிமுறை தொடர்பான ஐ.நாவின் திறப்புப் பணிக்குழுக் கூட்டம் ஜெனீவாவில் மே 10ஆம் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீனப் படைகலக்குறைப்பு விவகாரத் தூதர் லீசொங் சீனப் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி இக்கூட்டத்தில் பங்கெடுத்தார்.

இக்கூட்டத்தில் லீசொங் கூறுகையில், புறவெளி பாதுகாப்புச் சூழ்நிலை, புறவெளி படைக்கலப்போட்டிக்கான தடுப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த சீனாவின் கருத்துக்கள் மற்றும் நிலைப்பாட்டை விவரித்ததோடு, பொதுவான புறவெளி பாதுகாப்பைச் ஆக்கமுடன் பேணிக்காக்குமாறு சர்வதேசச் சமூகத்துக்கு வேண்டுக்கோள் விடுத்தார். புறவெளியில் ஆதிக்கம் செலுத்த மாட்டாது என்ற வாக்குறுதியை மேல்நிலை வல்லரசு அளிப்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.