2022 சீனா-ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு
2022-05-11 18:36:23

"2022 சீனா-ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு" 10ஆம் நாள் நடைபெற்றது. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மனித உரிமைகள் குறித்து இந்தக் கருத்தரங்கு கவனம் செலுத்துகிறது. ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சீனா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி முதலிய நாடுகளில் இருந்து வந்த 100க்கும் மேற்பட்ட மனித உரிமைகள் துறையின் நிபுணர்கள், அறிஞர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர், இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகள் முதல் ஆஸ்திரியாவின் முன்னாள் அரசுத் தலைவர் ஹெய்ன்ஸ் பிஷ்ஷர் சீனாவில் பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தக் கருத்தரங்கில் அவர் கூறுகையில், சீனாவின் சமூகப் பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான வேகமான வளர்ச்சியை நேரில் கண்டார் என்று தெரிவித்தார்.

சீனாவில் பல கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபடுவது, மனித குல வரலாற்றில் மிகப்பெரிய மனித உரிமை சாதனைகளில் ஒன்றாகும் என்று வியன்னா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஹான்ஸ் ஃபெல்னர் தெரிவித்தார்.