அமைதியின்மைக்கு மத்தியில் சட்டம், ஒழுங்கை பேணுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது!
2022-05-11 18:59:14

இலங்கையில் ஏற்பட்ட வன்முறைக்கு பிறகு, பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நாட்டின் ஆயுதப் படைக்கு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் அமைதியாக இருக்குமாறும், வன்முறைகள் மற்றும் பிறருக்கு எதிரான பழிவாங்கும் செயல்களில் இருந்து விலகி இருக்குமாறும் அரசுத் தலைவர் கோட்டாபய ராஜபசா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.

இலங்கையில் நிலவும் அரசியல் கொந்தளிப்புக்குத் தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அரசுத் தலைவரிடம் பாராளுமன்றத் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.