ரஷ்ய-உக்ரைன் மோதலுக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 3 மடங்கு அதிகரித்துள்ளது!
2022-05-11 18:58:26

மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், ரஷ்ய-உக்ரைன் மோதல் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று உள்ளூர் செய்தித்தாள் ஒன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

உள்ளூர் செய்தித்தாள்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் படி,  பிப்ரவரி 24 ஆம் நாள் மற்றும் மே 8 ஆம் நாளுக்கு இடையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது 393 விழுக்காடு உயர்ந்து 186 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. அதே நேரத்தில் பெட்ரோலிய பொருட்கள் 175 விழுக்காடு உயர்ந்து 56,000 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.

"அதேபோல், நிலக்கரி சார்ந்த பொருட்களின் இறக்குமதி 277 விழுக்காடு உயர்ந்து 63 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. மேலும் உர கொள்முதல் 4.3 கோடி அமெரிக்க டாலர்களில் இருந்து 37.6 கோடி அமெரிக்க டாலர்களாக பல மடங்கு உயர்ந்துள்ளது" என்று செய்தித்தாளின் தரவுகள் காட்டுகிறது.