பிரிக்ஸ் அமைப்பின் 12ஆவது சுகாதார அமைச்சர்கள் கூட்டம்
2022-05-11 18:40:12

பிரிக்ஸ் அமைப்பின் நடப்பு தலைவர் பதவி வகிக்கும் நாடான சீனா, மே 10ஆம் நாள் 12ஆவது சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தைக் காணொளி வழியாக நடத்தியது. பிரிக்ஸ் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், உலக சுகாதார அமைப்பின் துணை தலைவர் உள்ளிட்ட சுமார் 70 பேர் இக்கூட்டத்தில் பங்கெடுத்தனர். பெருமளவிலான தொற்று நோய்க்கான ஆரம்பக் கால முன்னெச்சரிக்கை முறைமை தொடர்பான பணிகளைத் துவங்குவது, இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கோவிட்-19 நோய் தடுப்பு, சுகாதார அமைப்பு முறை கட்டுமானம், எண்ணியல் சுகாதாரம் முதலியவை பற்றிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

தற்போது வரை 120க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு 220 கோடி டோஸ் தடுப்பூசியை சீனா வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவர் மா ஷியோ வேய் கூறுகையில், மக்கள் அனைவருக்கும் சுகாதாரம் வழங்கும் வகையில், பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.