பிலிப்பைன்ஸின் புதிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2022-05-12 14:38:40

பிலிப்பைஸின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெருக்கப்பட்ட ஃபெர்டினாண்ட் மார்கோஸுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 11ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பின் கூட்டு முயற்சியுடன், சீன-பிலிப்பைன்ஸ் உறவு வலுவடைந்து, இருநாட்டு மக்களுக்கு நன்மை தருவதோடு, பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும் பங்காற்றி வருகிறது என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், பிலிப்பைன்ஸுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றேன். அரசுத் தலைவர் மார்கோஸுடன் சீரான பணி தொடர்பை உருவாக்கி, இருநாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டுறவை முன்னேற்றி, இருநாடுகள் மற்றும் மக்களுக்கு நன்மை புரிய விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.