சொந்த பாதுகாப்பை ஐரோப்பிய நாடுகள் சுயமாக கட்டுப்படுத்த வேண்டும்: ஷிச்சின்பிங்
2022-05-12 11:32:46

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 9,10 ஆகிய நாட்களில் ஜெர்மனி தலைமை அமைச்சர் ஓலாஃ ஸ்கோல்ஸ், பிரேஞ்சு அரசுத் தலைவர் மக்ரோன் ஆகியோருடன் முறையே தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். சொந்த பாதுகாப்பை ஐரோப்பிய நாடுகள் சுயமாகக் கட்டுப்படுத்த ஆதரவளிப்பதாக ஷி ச்சின்பிங் இருவருக்கும் தெரிவித்தார்.

இப்போது தொடர்ந்து வரும் ரஷிய-உக்ரைன் மோதல், ஐரோப்பாவுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் சதியால், ஐரோப்பிய நாடுகள் ரஷியாவின் மீது தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடுமையான எதிர்விளைவுகளை சந்தித்துள்ளன.

பாதுகாப்பு, அமைதி, செழுமை ஆகியவற்றை நனவாக்கும் விதம், ஐரோப்பாவுக்கு மேலதிகமான அறிவுகளும் வீரமும் தேவை.

குழுக்களுக்கிடையிலான மோதல், உலக பாதுகாப்புக்கு முக்கிய அச்சுறுதலாகும். பனிப்போரின் விளைவான நேட்டோ, ரஷியாவின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து கிழக்கு திசைக்கு விரிவாக்கியதால்தான் ரஷிய-உக்ரைன் மோதல் உருவாகியது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் சேர்ந்துள்ளன. இந்த நாடுகள் சொந்த நலனின் அடிப்படையில், ஐரோப்பாவின் நிரந்தர பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரஷியாவுடன் அமைதியாக பழக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.