சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
2022-05-12 10:24:52

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 11ஆம் நாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவலுடன் காணொளி வழியாக சந்திப்பு நடத்தினார்.

வாங்யீ கூறுகையில், சீன-பாகிஸ்தான் நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவு நீண்டகால சோதனையை தாக்குபிடித்து வருகிறது. பாகிஸ்தான் தன் அரசுரிமை மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கும், நாட்டின் வளர்ச்சிக்காக முயற்சி மேற்கொள்வதற்கும் சீனா முன்பைப் போலவே உறுதியாக ஆதரவளிக்கும் என்றும், சீனாவின் மைய நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவளிக்கும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்தார்.

பிலாவல் கூறுகையில், ஒரே சீனா என்ற கோள்கையைப் பாகிஸ்தான் உறுதியாகப் பின்பற்றி வருகிறது. மேலும், தைவான், சின்ஜியாங், திபெத், தென் சீனக் கடல் உள்ளிட்ட விவகாரங்களிலுள்ள சீனாவின் நிலைப்பாடுகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவளித்து வருகின்றது என்றார்.