அமெரிக்காவில் மருந்து மிகையளவு பயன்பாட்டால் உயிரிழந்தோர் அதிகரிப்பு
2022-05-12 10:20:05

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, 2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் மருந்து மிகையளவு பயன்பாட்டால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை வரலாறு காணாத உயர் பதிவை எட்டியுள்ளது என்று அந்நாட்டின் சிஎன்என் செய்தி நிறுவனம் மே 11ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

கடந்த ஆண்டில் மருந்து மிகையளவு பயன்பாட்டில் உயிரிழந்த 1 லட்சத்து 8 ஆயிரம் பேரில் மூன்றில் இரண்டு பகுதியினரின் மரணம், ஃபெண்டானில் அல்லது இதர செயற்கை ஓபியாய்டு மருந்துகளுடன் தொடர்புடையது. புள்ளிவிவரங்களின்படி, கோவிட்-19 நோய் தொற்று காலத்தில், 2021ஆம் ஆண்டில் மருந்து மிகையளவு பயன்பாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டை விட சுமார் 50 விழுக்காடு அதிகரித்தது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோவிட்-19 நோய் தொற்று, செயற்கை ஓபியாய்டு மருந்துகளின் பயன்பாட்டைத் தீவிரமாக்க கூடும். மருத்துவ முறைமை இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.