“கட்டாய உழைப்பு” என்ற சாக்குப்போக்கில் சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க முயலும் அமெரிக்கா
2022-05-12 15:08:41

1919ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாடு தொடங்கி, “கட்டாய உழைப்பு” என்ற சொல்லின் உள்ளிடக்கம் மற்றும் வரையறையை, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு உருவாக்கி மேம்படுத்தி வருகின்றது. தொடர்புடைய நாடுகள் உள்நாட்டில் தொழிலாளர்களின் மனித உரிமையில் கவனம் செலுத்தி, உழைப்பு நிலைமையை மேம்படுத்தத் தூண்டுவது அதன் நோக்கமாகும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்கா “கட்டாய உழைப்பு” என்ற சாக்குப்போக்கில், சீனாவின் தொழில் வளர்ச்சி, வெளிநாட்டுத் திட்டப்பணி, சின்ஜியாங்கில் சிறுபான்மை தேசிய இனங்களின் வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் தொழிலாளர்களின் உரிமை நலன் மீது தீய நோக்கத்துடன் பழி தூற்றி வருகிறது.

 “கட்டாய உழைப்பு” என்ற விவகாரத்தை அமெரிக்கா அரசியல்மயமாக்கி, அதன் உள்ளடகம் மற்றும் பயன்பாட்டை விரிவாக்குவது, சர்வதேசச் சமூகத்தின் ஆரம்ப நோக்கத்தை மீறியுள்ளது. கரோனா வைரஸ் பரவல், பொருளாதார வீழ்ச்சி, தீவிரமாகி வரும் அரசியல், ஏழை பணக்கார இடைவெளி முதலிய நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற அமெரிக்கா, சீனாவைத் தடுக்காமல், உள்நாட்டு மக்களின் பொது நலன்களில் கவனம் செலுத்த வேண்டும்.