இலங்கையில் இயல்பு நிலை திரும்பும் வரை முன்னாள் தலைமை அமைச்சர் கடற்படை தளத்தில் தங்கியிருப்பார்!
2022-05-12 18:32:12

இலங்கையின் முன்னாள் தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு காரணங்கள் கருதி, விமானம் மூலம் திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக  பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன புதன்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இலங்கையில் இயல்பு நிலை திரும்பியவுடன், முன்னாள் தலைமை அமைச்சர் அவர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார் என்று கமல் குணரத்ன கூறினார்.

முன்னாள் அரசுத் தலைவர் என்கின்ற வகையில் மகிந்த ராஜபக்ச வாழ்நாள் பாதுகாப்புக்கு தகுதியானவர் என்பதால், அவருக்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும் என்று குணரத்ன மேலும் கூறினார்.

இலங்கை முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமை காலை வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.