மக்கள் வாழ்க்கைக்கு சீனாவின் வரவு செலவுத் திட்டம்
2022-05-12 11:33:41

மக்கள் வாழ்க்கை துறைக்கான வரவு செலவுத் திட்டங்கள் சிலவற்றை சீனா அண்மையில் வெளியிட்டு, இத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.

அடிப்படை கல்வியின் உயர்தர வளர்ச்சியை விரைவாக முன்னேற்றும் விதமாக, கட்டாயக் கல்வி, மாணவர்களின் ஊட்டச்சத்து மேம்பாடு உள்ளிட்ட கொள்கைகளை செயல்படுத்துவது, அனைவருக்கும் நன்மை தரக் கூடிய பாலர் கல்வி வளங்களை விரிவாக்கி, மழலைக்கான உதவி முறைமையை வலுப்படுத்துவது,  மாவட்ட அளவில் உயர்நிலை பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் உள்ளூர் அரசுகளுக்கு ஆதரவாக, முறையே 21250 கோடி யுவான், 2300 கோடி யுவான் மற்றும் 700 கோடி யுவான் நிதி ஒத்துக்கீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.