வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு, இந்திய அரசு அறிவுறுத்தல்!
2022-05-13 18:52:15

இந்தியாவின் மத்திய கல்வி அமைச்சகம் தற்போதைய வெப்ப அலையின் மோசமான விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிகளுக்கு வெளியிட்டுள்ளது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இந்திய வானிலை ஆய்வுத் துறை வெள்ளிக்கிழமை முதல் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வெப்ப அலையை அறிவித்துள்ள நிலையில், பள்ளிகள் நேரத்தை குறைக்க வேண்டும், சீருடை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை  அறிவுறுத்தியுள்ளது.

வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை கடந்த மாதம் கூறியது.

மார்ச் மாதத்தில் இந்தியாவில் 122 ஆண்டுகளில் காணாத வெப்பம் பதிவாகியுள்ளது.

தலைநகர் புது தில்லியில் வெப்பம் 46 டிகிரி சென்டிகிரேட் ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.