முடிந்துள்ள தேசிய இலையுதிர் தானிய கொள்முதல்
2022-05-13 16:48:17

சீனத் தேசிய தானிய மற்றும் பொருள் இருப்புப் பணியகம் 12ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, தற்போது, நாடளவில் நடப்பு வருடாந்திர இலையுதிர்கால தானிய கொள்முதல் சுமுகமாக முடிந்தது. முக்கிய உற்பத்தி பகுதிகளிலிருந்து மொத்தம் 18525 கோடி கிலோகிராம் தானியங்கள் பெறப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2500 கோடி கிலோகிராம் அதிகமாகும்.

அவற்றில் 6630 கோடி கிலோகிராம் நடு மற்றும் பிற்போக நெல், 11655 கோடி கிலோகிராம் மக்காச்சோளம், 240 கோடி கிலோகிராம் சோயா அவரை ஆகியவை அடங்கும்.

இவ்வாண்டு தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், பல்வேறு இடங்களில் அனைத்து துறைகளும், உயர்தர விவசாய நிலக் கட்டுமானம் உள்ளிட்ட விவசாய அடிப்படை வசதிகளுக்கான ஒதுக்கீட்டை மேலும் அதிகரித்து, விவசாய பேரிடர் எதிர்ப்பு மற்றும் தானியத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி திறனை மேம்படுத்தி வருகின்றன.

இதுவரை இவ்வாண்டின் வசந்தகால தானிய விதப்புப் பணியின் 72.4% மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.