சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான பரந்த எதிர்காலம்
2022-05-13 17:15:49

சீன வணிக அமைச்சகம் 12ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரை, சீனாவில் அந்நிய முதலீட்டில் உண்மையாகப் பயன்படுத்திய தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.5 விழுக்காடு அதிகமாகும். சீனாவில் 10 கோடி அமெரிக்க டாலர்களுக்கு மேலான புதிய வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை, 185 ஆகும். நாடு கடந்த தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீட்டை ஆக்கப்பூர்வமாக விரிவாக்குவது சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்காலத்தின் மீதான உறுதியான நம்பிக்கையை முழுமையாகக் காட்டியுள்ளது என்று சீன வணிக அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது, புதிய ரக கரோனா வைரஸ் பரவல், உலகப் பொருளாதாரத்துக்கும் உலகத் தொழில்துறை சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலிக்கும் அறைகூவல்களைக் கொண்டுள்ளது. ஆனால், உலகப் பொருளாதாரத்தின் நிதானத்துக்கும் மீட்சிக்கும் வலுவான சக்தியைச் சீனப் பொருளாதாரம் தொடர்ந்து வழங்கி வருகின்றது.