வட கொரியாவில் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
2022-05-13 10:28:46

வட கொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளரும் தேசிய விவகார ஆணையத் தலைவருமான கிம் ஜொங் உன் 12ஆம் நாள் நாட்டின் அவசர நோய் தொற்று தடுப்பு ஆணையகத்தில் பயணம் மேற்கொண்டார் என்று வட கொரிய மத்திய செய்தி நிறுவனம் 13ஆம் நாள் செய்தி வெளியிட்டது. தகவலின்படி, ஏப்ரல் இறுதி முதல், காரணம் தெரியாத காய்ச்சல் வட கொரியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. குறுகிய காலத்தில் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலாகும். இவர்களில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 200 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், 12ஆம் நாள் மட்டும், அந்நாட்டில் 18 ஆயிரம் பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கோவிட்-19 நோயாளி ஒருவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர் என்று தெரிய வந்துள்ளது.