ஷாங்காயில் பாதி முக்கிய தொழில் நிறுவனங்கள் மீட்சி
2022-05-13 16:45:39

ஷாங்காய் மாநகரில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய 9 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் சுமார் 4400 தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன. இவற்றின் மீட்சி விகிதம் பாதியளவைக் கிட்டும். அதே வேளை, மாநகரின் இயக்கத்துக்கு உத்தரவாதம், நோய் தடுப்பு பொருட்களின் விநியோகம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட துறைகளில் மீட்சி விகிதம் 70 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. வாகனம், வேதியியல் உள்ளிட்ட தொழிகளின் மாநிலம் கடந்த போக்குவரத்து விகிதம் உயர்ந்து வருகிறது.