சீனாவில் வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு
2022-05-13 20:45:33

சீன வணிக அமைச்சகம் 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், நாடளவில் உள்ளபடியே அன்னிய முதலீட்டுப் பயன்பாட்டுத் தொகை, 47 ஆயிரத்து 861 கோடி யுவான் எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில், நோய் பரவல் மற்றும் உலகத் தொழில் தொடர் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் மாற்றத்தால், உலகளவில் நாடு கடந்த முதலீட்டில் அதிக ஏற்றத்தாழ்வு காணப்பட்டுள்ளது. ஆனால், சீனாவில் அன்னிய முதலீட்டின் பயன்பாடு நிலையாக உயர்ந்து வருகிறது. இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் அதிகரித்த அன்னிய முதலீடு, இச்சீரான போக்கைக் காட்டியுள்ளது.

சீனாவின் சந்தை, பொருளாதார வளர்ச்சி ஆகியவை, நாடு கடந்த தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் 2 முக்கிய காரணிகளாகும். நிலையாக வளரும் சூழ்நிலையில், அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு, மேலும் அதிகப் பாதுகாப்பு உணர்வு கிடைப்பது திண்ணம்.