உக்ரைன் பிரச்சினை குறித்து சீனாவின் கருத்து: சேன் சூ
2022-05-13 11:26:23

உக்ரைன் பிரச்சினை பற்றிய ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் சிறப்பு கூட்டம் 12ஆம் நாள் நடைபெற்றது. அதில் ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி சேன் சூ உரை நிகழ்த்தினார்.

பல்வேறு தரப்புகள், ரஷிய-உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளித்து, பொதுவான, விரிவான, ஒத்துழைப்புடன் கூடிய மற்றும் தொடரவல்ல பாதுகாப்பு கருத்தின் அடிப்படையில், சரிசமமான, பயனுள்ள மற்றும் தொடரவல்ல உலக மற்றும் பிரதேச பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். உண்மையான பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, சர்வதேச மனித உரிமை இலட்சியத்தின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று இவ்வுரையில் சேன் சூ வேண்டுகோள் விடுத்தார்.

உக்ரைன் பிரச்சினையில், உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுரிமைக்கும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பது சீனாவின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.