© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
உக்ரைனுக்கு 4000 கோடி டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள உதவித் திட்டத்தை அமெரிக்க பிரதிநிதிகள் அவை கடந்த 10ஆம் நாள் ஏற்றுக் கொண்டது. இதில் இராணுவ உதவித் தொகை சுமார் 2500 கோடி டாலர். இதனிடையே, 4 ஆண்டுகள் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்கா எந்த நிதியுதவியும் வழங்கவில்லை என்று மெக்சிகோ அரசுத் தலைவர் லோபெஸ் குற்றம் சாட்டினார். ஐ.நாவும் அமெரிக்காவின் கஞ்சத்தனமான செயலை உணர்ந்து கொண்டுள்ளது. ஐ.நாவில் அமெரிக்கா பல ஆண்டுகளாக தனது நிதிப் பொறுப்பை நிறைவேற்றாமல், தற்போதுவரை 100 கோடி டாலர் உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்தவில்லை.
உலகளவில் ஒரேயொரு சூப்பர் வல்லரசான அமெரிக்கா, சிலசமயம் கஞ்சத்தனமானவன் போல், சிலசமயம் பணக்காரர் போல், சிலசமயம் குண்டர் போல் கூட செயல்படுகிறது.
கஞ்சத்தனமான அமெரிக்கா பொது மக்களின் உயிரை அலட்சியம் செய்யும். ஆனால் போரைத் தூண்டிவிடும் போது அது பணக்காரர் போன்று செயல்படும். அதன் வேறுபட்ட இவ்விரு முகங்களுக்குப் பின், செல்வம் மற்றும் மேலாதிக்கத்துக்கான ஒரேமாதிரியான சூழ்ச்சி உள்ளது.
உலகில் குழப்பம் இல்லாமல் அமெரிக்காவுக்கு மகிழ்ச்சி இல்லை. அமெரிக்காவுக்கு, சுயநலன் முதன்மை. குழப்பம் அதற்குச் செல்வத்தைக் கொண்டு வரக் கூடிய மூலமாகும்.