அமெரிக்க நுகர்வோரின் நம்பிக்கை குறைவு
2022-05-14 18:28:21

அமெரிக்க மெக்சிகன் பல்கலைக்கழகம் மே 13ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, மே திங்களின் தொடக்கத்தில் அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டு எண், 2011ஆம் ஆண்டு ஆகஸ்டுக்குப் பிறகு மிகக் குறைந்த அளவு பதிவாகியுள்ளது. பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அமெரிக்க பொது மக்கள் பொருளாதார வளர்ச்சி மீது கவலைப்படுகின்றனர்.

மேலும், தற்போது பொருளாதார நிலைமைக்கான அமெரிக்க நுகர்வோரின் மதிப்பீட்டு எண் குறிப்பிட்ட அளவில் குறைந்து, 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக குறைவான அளவு பதிவாகியுள்ளது. தற்போதைய பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு, பண வீக்கம் முக்கிய காரணம் என்று 36சதவீத நுகர்வோர் கருதுகின்றனர்.

மேலும், அடுத்த 5முதல் 10ஆண்டுகள் வரை, விலைவாசி, ஆண்டுக்கு 3விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரிக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.