தாமஸ் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா வரலாற்று சாதனை
2022-05-14 18:47:26

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், 13ஆம் நாள் இரவில் நடந்த அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து வரும் 15ஆம் நாள் நடைபெறவுள்ள சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில், இந்திய அணியும் இந்தோனேசிய அணியும் சந்திக்க உள்ளன.