© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஒத்தி வைக்கப்பட்ட அமெரிக்கா- ஆசியான் சிறப்பு உச்சி மாநாடு இறுதியாக, மே 13ஆம் நாள் வாஷிங்டனில் நிறைவு பெற்றது. அமெரிக்கா மிகவும் எதிர்பார்க்கும் இந்தோ-பசிபிக் உத்திநோக்குத் திட்டத்தின் முக்கிய ஒரு பகுதியாக, இந்த உச்சி மாநாடு தொடர்பான உண்மையான நோக்கம், நிகழ்ச்சி நிரல், இறுதி முடிவுகள் ஆகியவை அதிகமான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. உச்சி மாநாட்டிற்குப் பிறகு வெளியான கூட்டறிக்கையில் உண்மையான அம்சங்கள் குறைவு. இந்த உச்சி மாநாடு பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், அமெரிக்கா சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பதில்லை. ஆசியாவில் தனது நண்பர்கள் குழுவை விரிவாக்குவதாக கூறும் அமெரிக்கா, மாறாக, சீனாவைத் தடுக்கும் விதம் சிறிய குழுவையே உருவாக்க முயல்கிறது என்று கருத்து தெரிவித்தனர்.
ஆசியான் நாடுகளில் 15 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்று அமெரிக்கா வாக்குறுதி அளித்தது. 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியானுக்கு இந்த முதலீட்டுத் தொகை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்கு 2 நாட்களுக்கு முன்பு, உக்ரைனுக்கு 4000 கோடி டாலர் மதிப்புள்ள உதவி அளிக்கும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரண்டையும் ஒப்பிடுகையில், ஆசியான் நாடுகள், அமெரிக்காவின் பார்வையில் தகுநிலை என்ன என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், உச்சி மாநாட்டில், அமெரிக்கா முன்வைத்த இந்தோ-பசிபிக் பொருளாதாரத் திட்டம், ஆசியான் நாடுகளிடையே எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. அமெரிக்க செய்தி ஊடகங்களும், இந்த திட்டத்தில் திட்டவட்டமான அம்சங்கள் இல்லை. அது கொள்கை ரீதியிலான கருவி மட்டும் என்று விமர்சித்துள்ளன.