இந்தியாவின் கோதுமை ஏற்றுமதித் தடையால் உணவு விலை மேலும் உயரக் கூடும்
2022-05-15 16:07:49

உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளதாக இந்திய அரசு 13ஆம் நாள் அறிவித்துள்ளது. இந்தத் தடையால் உலகளவில் உணவு விலை மேலும் உயரக் கூடும் என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதி முதல் இந்தியாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பநிலை நிலவுகிறது. தானிய உற்பத்தியின் கணிப்பை முன்பு மதிப்பிட்ட 11கோடியே 10லட்சம் டன்னிலிருந்து 10கோடியே 50லட்சம் டன்னாகவும் இந்தியா மே மாதம் குறைத்துள்ளது.

ரஷிய-உக்ரைன் மோதலால், உலக உணவு விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இவ்விரு நாடுகளிலிருந்த கோதுமை ஏற்றுமதி உலக கோதுமை ஏற்றுமதியில் 30விழுக்காடு வகிக்கிறது. இவ்வாண்டின் தொடக்கம் முதல், உலக கோதுமை விலை 40விழுக்காடு உயர்ந்துள்ளது.