அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 10பேர் உயிரிழப்பு
2022-05-15 16:35:10

அமெரிக்காவின்  நியூயார்க் மாநிலத்தின் பஃபலோ நகரிலுள்ள பேரங்காடி ஒன்றில் மே 14ஆம் நாள் துப்பாக்கி சூடு சம்பவம் ஏற்பட்டது. இதில் 10பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். அங்கு சம்பவ இடத்தில், வெள்ளையினத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெறுப்புக் குற்றமாகவும் இனவெறி வன்முறையாவும்  தீவிரவாதமாகவும் கருதி, இச்சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த பேரங்காடி, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கூட்டமாக வாழ்ந்து வரும் குடியிருப்பில் அமைந்துள்ளது.  இந்த சம்பவத்தில் 13 பேர் சுடப்பட்டனர்.  அவர்களில் 11பேர் கருப்பினத்தவர்கள். 2பேர் வெள்ளையினத்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.