அமெரிக்காவில் ஒரே நாளில் பல துப்பாக்கிச் சூடு
2022-05-16 16:13:12

அமெரிக்காவின் பொது இடங்களில் 15ஆம் நாளன்று பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. டெக்சாஸ் மாநிலத்தில் பழைய பொருட்கள் சந்தையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

கலிஃபோர்னியா மாநிலத்தின் தேவாலயம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமைடந்தனர். இதற்கு முந்தைய நாள், நியூயார்க்கின் பஃபலோ நகரிலுள்ள பேரங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.