முதல் 4 திங்கள்காலத்தில் சீன பொருளாதாரத்தின் புள்ளிவிவரங்கள்
2022-05-16 15:26:11

சீன தேசிய புள்ளிவிவரப் பணியகம் மே 16ஆம் நாள் வெளியிட்ட தகவலின் படி, இவ்வாண்டு முதல் 4 திங்கள்காலத்தில், சீனாவில் நிலையான சொத்துக்களுக்கான முதலீட்டுத் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.8 விழுக்காடு அதிகம். சரக்குகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.9 விழுக்காடு அதிகம். ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூடுதல் மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4 விழுக்காடு அதிகம். ஜனவரி முதல் ஏப்ரல் வரை, நகரங்களில் 40 இலட்சத்து 60 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக வழங்கப்பட்டன.

பொதுவாகப் பார்த்தால், ஏப்ரல் திங்களில், கோவிட்-19 நோய் தொற்று பொருளாதாரச் செயல்பாட்டுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இத்தாக்கம் தற்காலிகமானது. சீன பொருளாதாரம் நீண்டகாலத்துக்கு சீராக வளரும் போக்கு மாறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.