இந்திய தலைமை அமைச்சர் மோடி மே 26 ஆம் நாள் தமிழகம் வருகிறார்!
2022-05-16 15:27:44

உள்ளூர் செய்திகளின் படி, இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மே 26 ஆம் நாள் தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மே 26 ஆம் நாள், தில்லியில் இருந்து சென்னை வரும் தலைமை அமைச்சர் மோடிக்கு தமிழக அரசு சார்பாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இப்பயணத்தின் போது, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மொத்தம் 12,413 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை மோடி தமிழகத்தில் தொடங்கிவைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.