சீனப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சி மாறாது!
2022-05-17 15:46:17

உலகளவில் சிக்கலான நிலைமை மற்றும் உள்நாட்டில் கோவிட்-19 பரவலின் பாதிப்பால், ஏப்ரல் மாதம் சீனப் பொருளாதாரத்தின் முக்கிய குறியீடுகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 பரவால் ஏற்பட்ட குறுகிய கால பாதிப்பு இதுவாகும். சீனப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சி முன்னேற்றப்போக்கு மாறாது என்று சீனத் தேசிய புள்ளிவிவிரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் 16ஆம் நாள் சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில், ஷாங்காயின் 16 மாவட்டங்களிலுள்ள 15 சமூக பரவல் நிலை பூஜ்ஜியம் ஆகப்போகிறது. ஜூன் திங்கள் முதல் ஷாங்காயில் இயல்பு உற்பத்தி மற்றும் வாழ்க்கை மீட்கப்படும். ஷாங்காயில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய 9000 தொழில் நிறுவனங்களில் சுமார் 4400 நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன. சீனாவின் பிற பகுதிகளிலும் பரவல் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படுகிறது. சீனா, டைனமிக் ஜீரோ-கோவிட் கொள்கையை பின்பற்றி வருவது, அறிவியல் பூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது, சீனப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு உத்தரவாதம் அளித்து வருகிறது.

மேலும், சீனாவின் மாபெரும் சந்தை என்ற இந்த சாதகம் இன்னும் தெளிவாக கண்டுள்ளது. சீனப் பொருளாதாரம் தொடர்ந்து நிலையாக வளர்ந்து வருகிறது என்று புள்ளிவிவரங்களில் காட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் சீனச் சமூக நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை 2லட்சத்து 90ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. மொத்த இறக்குமதி ஏற்றுமதித் தொகை 3லட்சத்து 20ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. அது மட்டுமல்ல, இவ்வாண்டு முதல் 4 திங்கள்களில் சீனாவில் நடைமுறைக்கு வந்த வெளிநாட்டு முதலீடு 47ஆயிரத்து 861கோடி யுவான் ஆகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 20.5 விழுக்காடு அதிகமாகும். சீனப் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை இது மேலும் நன்கு வெளிகாட்டியுள்ளது.

கோவிட்-19 தொற்றுப் பாதிப்பு சீனப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிப் போக்கைப் பாதிக்காது. திறப்பை விரிவாக்கி உலகத்துடன் இணைந்து கூட்டு வெற்றி மற்றும் பரஸ்பர நன்மை பெறுவதற்கான சீனாவின் மனவுறுதியும் மாறாது என்று நம்புகிறோம்.