ஐ.நா கடல் சட்ட பொது ஒப்பந்தம் பற்றி பேசிய அமெரிக்காவின் தகுதி என்ன?
2022-05-17 11:11:40

தென்சீனக் கடல் செயல்பாட்டுக் கோட்பாட்டை வகுப்பது, சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் பொது விருப்பமாகும். இப்பிரதேசத்துக்கு அப்பாற்பட்ட நாடான அமெரிக்கா, தென்சீனக் கடல் பிரதேச அமைதியைப் பேணிக்காக்கும் முயற்சிக்கு மதிப்பளித்து, கோட்பாட்டின் நடைமுறையாக்கத்தில் தலையிட வேண்டாம் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சாவ் லீச்சியேன் 16ஆம் நாள் தெரிவித்தார்.

அமெரிக்க-ஆசியான் உச்சிமாநாட்டில் மே 13ஆம் நாள் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், கடல் சட்டம் பற்றிய ஜ.நா பொது ஒப்பந்தத்தின் படி அமைதியான முறையில் சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ச்சாவ் லீச்சியேன் கூறுகையில், கடல் சட்டம் பற்றிய ஜ.நா பொது ஒப்பந்தத்தில் சேராத அமெரிக்கா, அடிக்கடி பிற நாடுகளின் விவகாரங்களை விமர்சித்து வருகின்றது. இவ்வொப்பந்தத்தைக் கொண்டு, பிறரைப் பற்றி திரித்துப்பேசும் தகுதி அமெரிக்காவுக்கு உண்டா?என்று கேட்டார்.

சீன மற்றும் ஆசியான் நாடுகளின் கூட்டு முயற்சியுடன் தென்சீனக் கடல் நிலைமை நிதானமாக உள்ளது. மே பிற்பாதியில் இரு தரப்புகளும் நேரடி கலந்தாய்வுக் கூட்டம் நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.