சீனாவில் சுங்க வரி குறைப்பு
2022-05-17 15:15:47

மே 17ஆம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை, "சீனாவில் இந்தப் பத்து ஆண்டுகள்" என்ற தலைப்பில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிந்தைய பத்து ஆண்டுகளில், பொருளாதாரத் துறையிலுள்ள பயனுள்ள ஒத்துழைப்பைச் சீனா ஆழமாக்கி, பலதரப்பு மற்றும் இருத்தரப்புகளின் நிதிப் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி வருகின்றது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை நிறுவுவதற்கு முன்மொழிந்து, புதிய வளர்ச்சி வங்கியை நிறுவுவதை முன்னேற்றி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவை ஆழமாக்கி வருகின்றது. மேலும் சீனா தனது சுங்க வரிக் கட்டண அளவை, 2010ஆம் ஆண்டில் இருந்த 9.8 விழுக்காட்டிருந்து 7.4 விழுக்காடாகக் குறைத்துள்ளது. உயர் திறப்புத்தன்மை வாய்ந்த புதிய பொருளாதார  அமைப்பு முறைமையை உருவாக்குவதிலும் சீனா ஈடுபட்டு வருகின்றது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.